குழந்தை பேறு கிடைக்க திருப்பதி அமிர்தகலச பிரசாதம் / பகுதி - 1
திருப்பங்களை தந்தருளும் திருப்பதி
யாரும் அறியப்படாத திருப்பதி தகவல்கள் - 1
குழந்தை பேறு கிடைக்க திருப்பதி அமிர்தகலச பிரசாதம்
![]() |
| அமிர்தகலச பிரசாதம் / புகைப்படம்: சாந்தி கிருஷ்ணகுமார் |
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், திருமலை திருப்பதியில், பெருமாளுக்கு ``அமிர்தகலசம்’’ என்கின்ற ஒரு பிரசாதம் நைவேதியம் செய்யப்படுகிறது. அந்த திருமலையப்பனுக்கு நைவேத்தியம் செய்வதால் என்னவோ... அவனை போலவே, அவனின் திருநாமத்தை போலவே மிகுந்த சுவையுடம் இருக்கும். மலையப்பனுக்கு வைக்கப்படும் இந்த பிரசாதத்தை எப்படி செய்கிறார்கள் என்பதை பற்று பார்ப்போமா!
அரிசிமாவு, மிளகு, வெல்லம், நெய் என சேர்த்து செய்யப் படும் ஒரு பிரசாதம். சாமிக்கு நைவேதியம் செய்துவிட்டு, அடுத்து கருடாழ்வாருக்கு நைவேதியம் செய்வார்கள். அதன் பின், பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகம் செய்வார்கள்.
![]() |
| நன்றி: சாந்தி கிருஷ்ணகுமார் |
இதன், சிறப்பு என்னவென்றால், அமிர்தகலசம் சாப்பிடும் தம்பதிகளுக்கு உடனே குழந்தை பேறு கிடைக்கும். அதுமட்டுமில்லாம், இந்த அமிர்தகலசம் பிரசாதம் எடுத்துக் கொண்ட தம்பதிகளுக்குப் பிறக்கும் அந்த குழந்தையினால், அந்தத் தம்பதிகளுக்கு சிறப்பு உண்டாகும் என்றும், ஆகம சாஸ்திரம் சொல்கிறது.
அந்த அளவிற்கு விசேஷ சக்தி கொண்ட பிரசாதம் அமிர்தகலசம்..! இந்த அமிர்தகலசம் ஞாயிறு காலை மட்டுமே திருமலை திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அறியப்படாத தகவல்கள் தொடரும்...
தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027




கருத்துகள்
கருத்துரையிடுக